குடியுரிமை மசோதாவை கடலில் வீசுங்கள் – வைகோ ஆவேசம்

Default Image
  • மாநிலங்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 
  • குடியுரிமை சட்ட திருத்த முன்வரைவை வங்காள விரிகுடா கடலில் தூக்கி வீசுங்கள் என்று மாநிலங்களவையில் வைகோ ஆவேசமாக பேசியுள்ளார். 

மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டுவர முடிவு செய்தது.இதனால் இந்த மசோதா முதலில் நாடாளுமன்றத்தின் அவைகளில் ஒன்றான மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.ஆனால் இந்த மசோதாவிற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால் வாக்கெடுப்பின் போது மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்த நிலையில் மசோதா மக்களவையில் நிறைவேறியது.எனவே இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.அப்பொழுது இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் மதிமுக பொதுச்செயலாளரும்,எம்.பி.யுமான வைகோ உரையின் மீது பேசினார்.

அப்பொழுது அவர் பேசுகையில், குடியுரிமை சட்ட திருத்த முன்வரைவை வங்காள விரிகுடா கடலில் தூக்கி வீசுங்கள்.மத்திய அரசு வேண்டுமென்றே இலங்கை தமிழர்களை புறக்கணித்துள்ளது.மதத்தை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்டுள்ள இந்த மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானது.இந்த சட்டம் சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று வைகோ பேசினார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்