குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு.! வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.!இணையதள வசதி மற்றும் செல்போன் இணைப்பு துண்டிப்பு ..!

Default Image
  • அசாம் மாநிலம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் 5000 துணை ராணுவ வீரர்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  • அசாமில் பாதுகாப்பு கருதி 10 மாவட்டங்களில் இணையதள வசதி மற்றும் செல்போன்கள் 24 மணி நேரத்திற்கு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த மசோதா மக்களவை , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அசாம் மாநிலத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலானோர் மாணவர்கள்.

கவுகாத்தியில் தலைமைச் செயலகத்தின் அருகில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்று போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் பாதுகாப்பாக வைத்திருந்த தடுப்புகளை வீசி எறிந்தன. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் முக்கிய சாலைகளில் செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

ஆனால் போராட்டக்காரர்கள் போலீசாரையும் மீறி தலைமைச் செயலகத்தில் நுழைய முயன்றபோது  போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதும் மீண்டும் போராட்டம் நடத்துவதுமாக இருந்தனர். போராட்டக்காரர்கள் ,போலீசார் மீது  கற்களால் தாக்கினர்.

இதனால் தலைமைச் செயலகத்திற்கு முன்பு  மாணவர்களுக்கும் ,போலீசாருக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. நேற்று  மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்த  போராட்டம் பல மணி நேரம் நீடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இந்த சண்டையில் ஒரு பத்திரிக்கையாளர் காயமடைந்தார். மேலும் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்த்து சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் விரட்டியடித்தனர். ரயில் போராட்டம் காரணமாக சுமார் 15 ரயில்கள்  நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் அசாம் மாநிலம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் 5000 துணை ராணுவ வீரர்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அசாமில் பாதுகாப்பு கருதி 10 மாவட்டங்களில் இணையதள வசதி மற்றும் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணி முதல் 24 மணி நேரத்தில் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்