ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வகையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நேற்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இம்மசோதாவை அறிமுகப்படுத்ததுவதா.? வேண்டாமா .? என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் அதிமுக எம்.பிக்கள் உள்ளிட்ட 295 எம்பிக்கள் ஆதரவாகவும் , திமுக , காங்கிரஸை சார்ந்த 83 எம்பிக்கள் எதிராக வாக்களித்தனர். பின்னர் இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாததை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்கட்சி எம்.பிக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக எம்.பிக்கள் பேசினர்.இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அதிர் ரஞ்சன் சவுத்ரி, சவுக்கதா ராய் ஆகியோர் அரசியலமைப்பு சட்டம் வழங்கிய பல்வேறு சட்டங்களை மீறும் வகையில் இந்த மசோதா உள்ளது என்றும் மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் முறையாக உள்ளது என எதிர்த்தனர்.
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா மதரீதியாக நாட்டை பிளவுபடுத்தியது காங்கிரஸ் எனக்கூறினர். ஊடுருவல்காரர்களுக்கும் ,அகதிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மசோதா எந்தவித பாகுபாடும் இல்லை, எந்த மதத்தினரின் உரிமையைப் பறிக்கும் வகையில் இல்லை எனக் கூறினார்.
மேலும் மன்மோகன் சிங் , அத்வானி ஆகியோர் பாகிஸ்தான் சார்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக 0.001 சதவிதம் கூட இந்த மசோதா இயற்றவில்லை என கூறினர்.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு நீண்ட நேரமாக அமித் ஷா பதிலளித்தார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியல் சட்டத்துக்கு விரோதமாக இயற்றப்படவில்லை. நாட்டில் இருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என விளக்கம் அளித்தார்.
அமித் ஷாவின் விளக்கத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பிக்களும் , எதிராக 80 எம்.பிக்களும் வாக்களித்தனர்.இதை தொடர்ந்து மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…