இலங்கை இந்துக்களை சேர்க்காதது ஏன் ? சிதம்பரம் கேள்வி
- குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்கவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- இலங்கை இந்துக்களை சேர்க்காதது ஏன் ? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலங்கவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.பின்னர் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் ,எம்.பி.யுமான ப.சிதம்பரம் பேசினார்.அவர் பேசுகையில், சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்த சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல்.எப்படி இஸ்லாமியர்களளையும் பிற மதத்தினரையும் அடையாளம் காண்பீர்கள்.
இலங்கை இந்துக்களை சேர்க்காதது ஏன் ? பூட்டான் இந்துக்களை சேர்த்தது ஏன் ? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார் .அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும்.கிருஸ்தவர்களை சேர்த்துவிட்டு இஸ்லாமியர்களை நீக்கியது ஏன் என்றும் இந்த கேள்விகளுக்கு பொறுப்பேற்று பதில் சொல்லப்போவது யார், நன்மை தீமைகளுக்கு பொறுப்பாளி யார் என்று ப.சிதம்பரம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.