பெங்களூரில் மது வாங்க வரிசையில் நின்ற குடிமகள்கள்.!
பெங்களூரில் உள்ள ஒரு மதுபான கடை முன்பு பெண்களுக்கென தனி வரிசை அமைக்கப்பட்டு மது கொடுக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அன்று முதல் நாடு முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டது. மது கிடைக்காத விரக்தியில் பல மாநிலங்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். மது கிடைக்காததால் மது பிரியர்கள் 4 மடங்கு விலை கொடுத்து மது குடித்தும் வந்தனர்.
இந்நிலையில், இன்று முதல் மதுபான கடைகளைத் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்க அனுமதிப்பட்டது.
இன்று முதல் கர்நாடக மாநிலத்தில் கொரோனா அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படும் என கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இன்று முதல் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஒரு மதுபான கடை முன்பு ஆண்கள், பெண்கள் என அனைவரும் கூட்டமாக மது வாங்க கூடினர். இதையடுத்து கூட்டநெரிசல் காரணமாக ஆண்கள், பெண்களுக்கென தனி வரிசை அமைக்கப்பட்டு மது கொடுக்கப்பட்டது.