பெங்களூரில் உள்ள அன்னபூர்னேஷ்வரி நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள தனது நண்பரின் வீட்டில், சிஐடி துணை போலீஸ் சூப்பிரண்டு போலீஸ் (டிஎஸ்பி) லக்ஷ்மி நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது நான்கு நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. லக்ஷ்மி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. லட்சுமி கோலாரைச் சேர்ந்தவர், கோரனகுண்டேவில் வசித்து வந்தார். திருமணமாகி 8 ஆண்டுகள் ஆனாலும் குழந்தைகள் இல்லை. இதனால் தான் அவர் மனச்சோர்வடைந்து தற்கொலை செய்து கொண்டதாக லக்ஷ்மி நண்பர்கள் கூறியுள்ளனர்.
நேற்று இரவு லக்ஷ்மி அவரது நண்பரின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்டு அங்குள்ள ஒரு அறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னபூர்னேஸ்வரி நகர காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக உள்துறை அமைச்சர் கூறுகையில், இந்த வழக்கு அவரது பின்னணி உட்பட முழுமையாக விசாரிக்கப்படும் என்றும், என்ன தவறு நடந்துள்ளது என்பதை நாங்கள் பெறுவோம் என்றும் கூறினார். இந்த வழக்கை விசாரிக்க உயர் அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். போலீசாருக்கு நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம், விரைவில் இதை பெரிய அளவில் செய்வோம் என கூறினார்.
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…