தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ராஜிப் சர்மா கைது செய்யப்பட்டதை சிஐடி விசாரிக்க உள்ளதாக அசாம் போலீஸ் தெரிவித்துள்ளது.
அசாமில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிக்கையாளராக பணியாற்றியவர் ராஜிப் சர்மா. துப்ரி கோட்டக வன அலுவலர் பிஸ்வாஜித் ராய் புகார் ஒன்றை அளித்தார்.அதாவது, ராஜிப் சர்மா தனது மனைவியுடன் தவறாக நடந்துகொண்டதாகவும் ,மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் புகார் தெரிவித்தார்.புகார் அளிக்கப்பட்ட நிலையில் கவுரிபூர் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அவரது நோய்வாய்ப்பட்ட தந்தை உயிரிழந்தார்.இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் கோட்டக வன அலுவலர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சர்மா துப்ரி மாவட்டத்தில் கால்நடைகள் கடத்தலில் கோட்டக வன அலுவலகம் மற்றும் மாவட்ட போலீசார் தீவிரமாக இருப்பது தொடர்பாக தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டுள்ளார். மேலும் இவர் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூடுதல் டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஜி.பி. சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…