கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக உலகம் முழுவதும் ஏற்பாடுகள் களை கட்டி வருகின்றனர் . கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வீட்டிலும் கண்ணைக் கவரும் விதமாக நட்சத்திரங்கள், வண்ண வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் குடில்கள், போன்றவை வைத்து அலங்கரிக்க தொடங்கி விட்டனர்.
மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம், கிறிஸ்து பிறப்பு வாழ்த்து பாடல்கள் என தற்போது கொண்டாட்டங்களை மக்கள் தொடங்கி விட்டனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் சார்பிலும் அதற்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் வீட்டிற்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து பாடல் பாட தொடங்கி உள்ளனர்.
அதிலும் குறிப்பாக பொது இடங்கள் , வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் அதிக செலவில் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் குடில் அமைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்கி உள்ளனர் .இதுமட்டுமல்லாமல் வீடுகளில் சிறு சிறு குடில்கள் அமைத்து வருகின்றனர்.
இதற்குத் தேவையான தருவைப் புற்களை மலையோரப் பகுதிகள் மற்றும் கால்வாய் பகுதிகளில் சென்று சேகரித்து வருகின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் மரம் வைத்து அதில் மின் விளக்குகளாலும் , கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை மற்றும் பலூன்களை தொங்க விட்டு அலங்கரித்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தமிழகத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெகு சிறப்பாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்கொண்டாடப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கேக்குகள் தயாரிக்கும் பணிகளும் தொடங்கிவிட்டது. பொதுமக்கள் ஜவுளி கடைக்கு புதிய ஆடைகளையும் வாங்க தொடங்கி விட்டனர்.கிறிஸ்தவ ஆலயங்களுக்கு வண்ணம் பூசுதல், மின் விளக்கு அலங்காரங்கள் என தேவாலயங்கள் அலங்கரித்து வருகின்றனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…