கிறிஸ்மஸ், புதுவருடத்தை முன்னிட்டு ஒயின் தயாரிக்க தடை..!
- கேரளாவில் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு வீடுகளில் தயாரிக்கும் ஒயின் விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான விளம்பரங்களும் , யூடியூப் சேனல்களில் ஒயின் தயாரிப்பது பற்றிய வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
- ஆனால் சர்ச்சுகளில் மட்டும் ஒயின் தயாரிக்க லைசன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.மீறி வீட்டில் ஒயின் தயாரித்தல் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.
கேரளாவில் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு வீடுகளில் ஒயின் தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் ஒயினை கடையில் வாங்குவதைவிட வீடுகளில் தயாரிப்பதை விரும்புகின்றன.
வீடுகளில் தயாரிக்கும் ஒயின் அதிக விலைக்கு கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்குவதால் சமூகவலைதளங்களில் வீடுகளில் தயாரிக்கும் ஒயின் விற்பனை செய்யப்படுவதாக கூறி ஏராளமான விளம்பரங்களும் வந்து உள்ளனர்.
மேலும் யூடியூப் சேனல்களில் ஒயின் தயாரிப்பது பற்றிய வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் வீடுகளில் ஒயின் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா காவல்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை ஆணையர் கூறுகையில் , கிறிஸ்துமஸ் புதுவருடத்தை முன்னிட்டு சர்ச்சுகளில் மட்டும் ஒயின் தயாரிக்க லைசன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது .அந்த லைசன்ஸ் ரத்து செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் ஒயின் தயாரிக்க ரூ3.25 ரூபாய் வரி கட்ட வேண்டும் .ஆனால் வீடுகளில் ஒயின் தயாரிக்க அனுமதி கிடையாது.
ஒயின் விற்பனை செய்வதாக கூறி சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வருகின்றன அப்படி ஒயின் தயாரித்தவர்களை பிடித்தால் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்து உள்ளனர்.