NSE Scam:சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள்.., டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி ..!

தேசிய பங்கு சந்தையின் (NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டு வந்த போது, இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியாரிடம் பல்வேறு ஆலோசனைப் பெற்று தேசிய பங்கு சந்தையில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பங்குச்சந்தை குறித்த ரகசிய தகவல்களை சாமியாரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு தடை:
சாமியார் ஆலோசனைபேரில் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை திட்ட ஆலோசகராக நியமனம் செய்து, அவருக்கு பல முறை ஊதிய உயர்வை சித்ரா வழங்கினார். இதன்காரணமாக, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ. 3 கோடி அபராதம் மற்றும் பங்குச் சந்தை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு 3 ஆண்டுகள் தடையை செபி விதித்தது.
சித்ரா ராமகிருஷ்ணா கைது:
இதனைத் தொடர்ந்து, அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடைபெற்றது. அதன்பின்னர், சித்ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால், முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், சித்ராவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டநிலையில், கடந்த 6-ஆம் தேதி சித்ரா ராமகிருஷ்ணா சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாள்கள் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வாங்கியது.
14 நாட்கள் நீதிமன்ற காவல்:
இந்நிலையில், தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. சிறையில் வீட்டு உணவை அனுமதிக்க வேண்டும் என்ற சித்ரா ராமகிருஷ்ணனின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. அதேநேரத்தில் வழிபாடு தொடர்பான நூல்களை கொண்டு செல்ல சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025