பேச்சுவார்த்தை எதிரொலி: லடாக் எல்லையில் பின் வாங்கி சீன படைகள்…?
இந்திய மற்றும் சீனா படைகள் தாக்குதல் தொடர்பாக ராணுவ படைப் பிரிவு லெப்டினட் ஜெனரல் இடையிலான மூன்றாவது பேச்சுவார்த்தை காலை 11 மணிக்கு கிழக்கு லடாக்கில், சீன எல்லையில் உள்ள சுஷுலில் தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 11 மணி வரை நீடித்தது என்று இராணுவ வட்டாரங்கள் ஜூலை 1 -ம் தேதி தெரிவித்தன. முதல் இரண்டு சுற்றுகள் மோல்டோவில் நடைபெற்றன.
இந்த, பேச்சுவார்த்தை போது கால்வான் பள்ளத்தாக்கு, பான்காங் டெசோ உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து சீன ராணுவம் உடனடியாக வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லடாக் எல்லையில் சீன படைகள் சுமார் 2 கி.மீ. அளவிற்கு சீன படைகள் பின் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணுவ கமாண்டர் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை எதிரொலி சீன படைகள் பின் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.