இந்தியாவில் சீன ஸ்மார்ட் போன்களின் சந்தை மதிப்பு 72 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
லடாக், கல்வான் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம், நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் பலரும் சீன பொருட்களை பயன்படுத்துவதை புறக்கணித்தனர். மேலும் சீன இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அதில், சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்த நிலையில், இந்தியாவில் டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 சீனா செயலிகளை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்த அந்த செயலிகள் அனைத்தும் நீக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து இந்தியாவில் சீன ஸ்மார்ட் போன்களுக்கும் தடை விதிக்கப்படுமா? என கேள்வி எழுந்தது. அதனையடுத்து, சீன ஸ்மார்ட்போன்களுக்கான தேவை இந்தியாவில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தநிலையில், ஜனவரி – மார்ச் காலாண்டில் சீன நிறுவனங்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், ஏப்ரல் – ஜூன் காலாண்டில் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
அதுமட்டுமின்றி, கவுன்ட்டர் பாயிண்ட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, சீன நிறுவனங்களில் சந்தை மதிப்பு இந்தியாவில் 9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம், இந்தியாவில் 10 சதவீதம் வளர்ச்சியை கண்டது.
இதன்மூலம், சாம்சங் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 26 சதவீதமாக உள்ளது. மேலும், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம், 1.3 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவின் சியோமி நிறுவனம், இந்தியாவில் 29 சதவீதம் சந்தைப் பங்கைக் கொண்டுள்ள நிலையில், தற்பொழுது அதன் சந்தை மதிப்பு, 1 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
மேலும் விவோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 17 சதவீதமாகவும், ரியல்மீ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 11 சதவீதமாகவும், ஒப்போ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 9 சதவீதமாகவும் உள்ளது. இந்தநிலையில், சீன ஸ்மார்ட் போன்களின் சந்தை மதிப்பு 72 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்ததாக தகவல் வெளியானது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…