அதிர்ச்சி ரிப்போர்ட்.! 40,000-க்கும் அதிக முறை இந்திய இணையத்தை முடக்க நினைத்த சீன ஹேக்கர்கள்.!
கடந்த ஜூன் 15 முதல் இன்று வரையில் மட்டுமே சீன நாட்டு ஹேக்கர்கள் இந்திய இணையத்தை (cyber space in india) முடக்க 40ஆயிரத்திற்கும் அதிக முறை முயன்றதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்திய சீன எல்லைகளில் ஒன்றான லடாக் பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் மோதல் உண்டானது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதனை அடுத்து, ஜூன் 15 முதல் இன்று வரையில் மட்டுமே சீன நாட்டு ஹேக்கர்கள் இந்திய இணையத்தை (cyber space in india) முடக்க 40ஆயிரத்திற்கும் அதிக முறை முயன்றதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த இணைய தாக்குதலானது, சீனாவில் உள்ள கிச்சுவான் மாகாணத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கிச்சுவான் பகுதிதான், சீனாவின் சைபர்வேர்ஃபேர் தலைமையகமாகும்.
இந்த சம்பவம் குறித்து, இந்திய கம்ப்யூட்டர் நுண்ணறிவாளர்கள் மேலும், ஆராய்ந்து வருகின்றனர். மேலும், இந்த இணைய தாக்குதல் அரசு சார்ந்த ஹேக்கர்களால் நடத்தப்படுகிறதா அல்லது ஏதேனும் தனியார் அமைப்பா என ஆராய்ந்து வருகின்றனர்.