இந்திய எல்லைக்குள் சீன படைகள் யாரும் ஊடுருவவில்லை-பிரதமர் மோடி.!

இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை. ராணுவ நிலையயும் யாரும் கைப்பற்றவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
லடாக் எல்லைப் பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மோடி, இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை. ராணுவ நிலையயும் யாரும் கைப்பற்றவில்லை.மேலும் அவர் கூறுகையில் இந்திய நிலத்தைப் பார்க்கத் துணிந்தவர்களுக்கு இந்த வீரர்கள் சரியான பாடம் கற்பித்ததாக கூறினார். நாட்டைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் இந்திய ஆயுதப்படைகள் செய்து வருவதாக பிரதமர் அணைத்து கட்சித் தலைவர்களுக்கு உறுதியளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025