#Breaking: நெடுஞ்சாலை பணிகளுக்கு சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

இந்தியாவில் நெடுஞ்சாலைகள் திட்டங்களில் சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்காரணமாக பல தரப்பின மக்கள், சீன பொருட்களை உபயோகிக்க மறுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் நடைபெறும் அனைத்து நெடுஞ்சாலை பணிகளுக்கு சீனா நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது எனவும், அது கூட்டுத் திடமாக இருந்தாலும் அனுமதி கிடையாது என திட்டவட்டமாக கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025