கடந்த சில மாதங்களாக இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் 15 -ம் தேதி(அதாவது திங்கட்கிழமை) இந்தியா- சீனா வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டாத நிலையில், இன்று இருநாட்டு ராணுவ கமாண்டர்களுக்கிடையில் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, கடந்த ஜூன் 15 -ம் தேதி லடாக்கில் நடந்த தாக்குதலில் சீன கமாண்டர் கொல்லப்பட்டதாக இந்த சந்திப்பில் சீன இராணுவம் அறிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…