லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதால் எல்லை பிரச்சினை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்து இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள ரெசாங்-லா மலைப்பாதையின் முக்பாரி பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாலை சீனப் படையினர் ஈட்டிகள், கூர்மையான ஆயுதங்களை எடுத்துச் செல்ல முயன்றதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன
இதுபற்றி ராணுவம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், லடாக்கின் கிழக்கு எல்லை கோட்டு பகுதியில் சீன வீரர்கள் குவிக்கப்பட்டு, அவர்கள் தங்களது முதுகு பகுதியில் துப்பாக்கிகளை தொங்க விட்டுள்ளனர். அதனுடன் பயங்கர ஆயுதங்களை ஏந்தி உள்ளனர்.
ஜூன் 15 ம் தேதி கிழக்கு லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களின் போது சீன வீரர்கள், இந்திய வீரர்கள் மீது கற்கள், ஆணி பதித்த குச்சிகள், இரும்பு கம்பிகள் மூலம் கொடூரமான தாக்குதலை நடத்தியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
45 வருட இடைவெளிக்குப் பிறகு எல்.ஐ.சி பகுதியில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1975 ஆம் ஆண்டில், எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அதன் பின்னர் தற்போது தான் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. எல்லையை தாண்டி சென்று எந்த துப்பாக்கியையும் பயன்படுத்தவில்லை என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…