அருணாச்சல பிரதேசம் மேல் சுமன்சுரி மாவட்டத்தில் இருந்து 5 பேரை சீன ராணுவ கடத்தியாக கூறப்படுகிறது. இதனை அம்மாநில எம்.எல்.ஏ நினோங் எரிங் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் முதல் லடாக்கில் இந்திய – சீனா இடையேயான எல்லை பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய ராணுவ தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், அருணாச்சல பிரதேசம் மேல் சுமன்சுரி மாவட்டத்தில் இருந்து 5 பேரை சீன ராணுவ கடத்தியாக கூறப்படுகிறது. உள்ளூர் ஊடக செய்தியின்படி, 5 பேரும் அண்டர் நாச்சோ வட்டத்தில் உள்ள செரா 7 என்ற ரோந்து பகுதியிலிருந்த்து கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ரசியா மற்றும் சீனா பாதுகாப்பு அமைச்சர்களை ராஜ்நாத் சிங் சந்திக்கும் நேரத்தில் இந்த கடத்தல் நடந்துள்ளதாக அருணாச்சல பிரதேச எம்.எல்.ஏ நினோங் எரிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டரில் பக்கத்தில், அதிர்ச்சி செய்திகள், நமது மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தால் (பி.எல்.ஏ) கடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, இதேபோன்ற சம்பவம் நடந்தது என்றும் சீனாவுக்கு தக்க பதிலடி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…