#Chinese app: சீனாவின் மேலும் சில செயலிகளுக்கு தடை செய்ய தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு..!

Default Image

இந்திய, சீன எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், சீனா செயலிகள் மூலம் இந்தியா தொடர்பான தகவல்களை பகிர்தல், நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது பங்கம் விளைவித்தல் போன்ற காரணங்களால் மத்திய உள்துறை அமைச்சகம்  டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்னும் பல மொபைல் செயலிகளை தடைசெய்ய ஒரு முடிவை எடுத்துள்ளது எனவும் அந்த செயலிகள் சீனாவை சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக் மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில் ‘டிக் டாக்’ உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்ய வேண்டும் என இந்தியாவில் கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த தடை விதித்து.

ஏற்கனவே கூகிள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டிக் டாக், ஹலோ, ஷேர்இட் , பிகோ போன்ற செயலிகள் நீக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்