பிரதமர் உட்பட 10,000 பேரை சீனா உளவு பார்த்த விவகாரம் – மாநிலங்களவையில் விவாதிக்க உத்தரவு.!

Default Image

சீன நிறுவனம் 10,000 பேரை உளவு பார்த்து வருவதாக வெளியாகியிருக்கும் தகவலை விவாதம் நடத்த மாநிலங்களவையில் உத்தரவு.

இந்தியாவில் பிரதமர் மோடி, ஜனாதிபதி உட்பட கிட்டத்தட்ட 10,000 பேரை சீன நிறுவனம் உளவு பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. உலகளாவிய தரவுகளில் இருக்கும் வெளிநாட்டு இலக்குகளில் இந்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் ஷென்சென் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள ஜென்ஹுவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் இருக்கும் முக்கிய இடங்கள் மற்றும் பிரபலங்கள் என ஆகியோரை அடையாளம் கண்டு கண்காணித்து வருகிறது. இந்த நிறுவனம் சீன கம்யூனிச கட்சிக்கும், சீன அரசுக்கும் அதிக அளவில் தொடர்பில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலை மாநிலங்களவை நடைபெற்றது. அப்போது, இந்தியாவில் பிரதமர் மோடி, உட்பட 10,000 பேரை சீன நிறுவனம் உளவு பார்த்து வருவதாக வெளியாகியிருக்கும் தகவலை விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு விவாதம் நடத்த உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்