வடகிழக்கு இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்திற்கு அருகில் மூன்று கிராமங்களை சீனா கட்டியுள்ளது.அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பம் லா பாஸிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இந்த கிராமங்கள் கட்டப்பட்டுள்ளன.
இது மேற்கு அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தியா, பூட்டான் மற்றும் சீனா இடையேயான முக்கோணத்திற்கு அருகில் உள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள கிராமங்கள் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவின் உரிமையை வலுப்படுத்துவதற்கான ஒரு படியாக இருக்கலாம்.
இந்தியா-சீனா உறவுகள் குறித்த நிபுணர் பிரம்மா செல்லானி கூறுகையில், ” இந்திய எல்லையில் சீனா தனது பிராந்திய உரிமைகோரல்களை வலுப்படுத்தவும், எல்லை ஊடுருவல்களை அதிகரிக்கவும் பயன்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.கிழக்கு லடாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டபோது இவை கட்டப்பட்டன என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளானட் ஆய்வகங்களிலிருந்து எடுக்கப்பட்ட படங்களின் படி , இந்த ஆண்டு பிப்ரவரி ஒரு கிராமம் மட்டுமே இப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது.ஆனால் இந்த நவம்பர் மாதத்திற்குள் மூன்று கிராமங்கள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…
புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக…
காஞ்சிபுரம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அளிக்காததை…