ரோந்து புள்ளி 14 -லிருந்து சீனா அனைத்து போர் வாகனங்களையும், கட்டமைப்புகளையும் நீக்கிய சீனா.!

Published by
murugan

இந்திய மற்றும் சீனப் படைகள் கிழக்கு லடாக்கில் ஜூன் 15 -ஆம் தேதி மோதலில் ஈடுபட்டுள்ளன. இந்த மோதலில் 20 இந்திய வீரர்களின் வீரமரணம்அடைந்தனர். சீன வீரர்களும் கொல்லப்பட்டனர், ஆனால் சீனா தனது இறந்த வீரர்களின்விவரத்தை இன்னும் அதிகாரபூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, இருநாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு இடையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இதற்கிடையில், சீனாவின் 59 ஆப்களுக்கு இந்தியா தடைவிதித்தது. இது சீனாவிற்கு ஒரு பேரிடியாக அமைந்தது. அதன்பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சீனா இறங்கி வர தொடங்கியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், நேற்றைய முன்தினம் அஜித்தோவல் மற்றும் வெளியுறவுத்துறை சீனியர் அதிகாரி மூலம் தொலைபேசியில் பேசியதை அடுத்து நேற்று கல்வானின் ரோந்து புள்ளி 14-லிருந்து 15 – ஐ நோக்கி  சீனா பின்னோக்கி நகரத் தொடங்கின. நேற்று மாலை நிலவரப்படி சீன இராணுவம் அதன் போர் வாகனங்கள் மற்றும் கட்டமைப்புகள் அனைத்தையும் ரோந்து புள்ளி 14- லிருந்து முழுமையாக அகற்றியது.

ரோந்து புள்ளி 14 -லிருந்து சீன ராணுவம் பின்வாங்கியிருந்தாலும் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக நிறுத்தப்பட்ட புல்டோசர்கள், போர் வாகனங்கள் உள்ளிட்டவை அங்கேயே இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றையும், ரோந்துப் புள்ளி 17-யும் காலி செய்ய டெல்லியில் இருந்து உத்தரவுகள் போன் மூலம் பெய்ஜிங்குக்கு செல்வதால், சீனா அவகாசத்தை கேட்டதாக கூறப்படுகிறது.

அடுத்து ரோந்து புள்ளி 17-ல்  கூடாரங்கள் மற்றும் புல்டோசர்கள் அகற்றப்பட்டுள்ளன. அடுத்த 2-3 நாட்களில் சீனா கால்வானில் இருந்து பின்வாங்குவதாகவும் கடந்த ஏப்ரல் இருந்த நிலைக்குத் திரும்பும் என்றும் கூறப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

4 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

4 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

6 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

7 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

9 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

10 hours ago