38,000 சதுர கி.மீ பரப்பளவை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது – ராஜ்நாத் சிங்

Default Image

லடாக்கில் சுமார் 38,000 சதுர கி.மீ பரப்பளவில் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாக லடாக் எல்லையில் பிரச்சனை இருந்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே பிரச்சினை ஏற்பட்டது.பல்வேறு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக அங்கு பதற்றம் இல்லாமல் இருந்து வந்தது.இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. தொடர்ந்து இரு தினங்களாக பான்காங் சோ ஏரியின் தெற்குக் கரை பகுதியில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்திய படை விரட்டியடித்தது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்களவையில் மத்தய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.அவர் பேசுகையில்,  லடாக்கில் சுமார் 38,000 சதுர கி.மீ பரப்பளவில் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.   இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை ஒப்பந்தத்தை சீனா மதிக்கவில்லை. அத்துடன் வரலாற்று பயன்பாடு மற்றும் நடைமுறை, இரு தரப்பினருக்கும் பல நூற்றாண்டுகளாக நன்கு அறியப்பட்டவை” என்று  பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்