#வாலை இனி ஆட்டக்கூடாது- சீனாவின் முக்கு உடைப்பு!!

Default Image

கடந்த சில மாதங்களாகவே எல்லையில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு மட்டுமின்றி  பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது இந்நிலையில்  இந்தியாவும் இம்மி அளவு கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று நெஞ்சை நிமிர்த்து தனது அனைத்து படைகளையும் எல்லையில் அணிவகுத்து நிறுத்தி விட்டது இந்தியாவின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத சீனா வாயை அடைத்து விட்டது.

எல்லையில் வாலை ஆட்டிய சீனாவின் அடாவடித்தனத்தை ஒரு சக்காக சீனா அபகரிக்க நினைத்த மட்டுமின்றி அதன் சில பகுதிகளையும் இந்தியா தன் வசப்படுத்தி கொண்டது.இந்தியாவின் இந்த செயலானது அனைத்து சீனா உளவு, சென்சார் என அனைவரின் கண்களிலும் மண்ணை தூவி பகுதிகளை பிடித்து வைத்து கொண்டது. ஏற்கனவே மூக்குடைக்கப்பட்ட சீனா இம்முறை பலத்த அடியை வாங்கி கட்டிக்கொண்டது.

இதற்கிடையிலும் இரு நாட்டு இராணுவ அதிகரிகளிடம் பேச்சுவார்த்தைகள் பலகட்டமாக நடந்து வருகிறது. அவ்வாறு இந்தியா சீனா இடையே, ராணுவ கமாண்டர்கள் அளவில், ஆறாம் சுற்று பேச்சு, சமீபத்தில் நடந்தது. இது குறித்து வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா நேற்று கூறியதாவது:

ராணுவ கமாண்டர்கள்அளவில் நடந்த ஆறாவது சுற்று பேச்சில், லடாக் எல்லையிலிருந்து படைகளை வாபஸ் பெறுவது பற்றி தான், மிக முக்கியமாகப் பேசப்பட்டது. மேலும்எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் சீனா இனி  ஈடுபடக் கூடாது; எல்லையில் இப்போதுள்ள நிலையை எந்த விதத்திலும் மாற்றவும் முயற்சிக்கக் கூடாது என்று சீனாவிடம்  உறுதியாக தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்