அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை!சக்திவாய்ந்த ஆயுதத்தை இந்தியாவிற்கு எதிராக சீனா உருவாக்கி வருவதாக எச்சரிக்கை ….
அமெரிக்கா இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு கடன் கொடுப்பதன் மூலம் சீனா இந்தியாவுக்கு எதிராக கடன்பொறி என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தை உருவாக்கி வருவதாக எச்சரித்துள்ளது. சீனா தனது ஒன் பெல்ட் ஒன் ரோடு பொருளாதாரச் சாலைத் திட்டத்தின் கீழ் பல்வேறு சிறு நாடுகளில் உள்நாட்டுத் திட்டங்களுக்கு கடன் உதவிகளைச் செய்து வருகிறது.
சீனா அதிக வட்டிக்கு வழங்கும் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாத நாடுகளில் திட்டங்களையும் திட்டம் சார்ந்த நிலங்களையும் கையகப்படுத்தும் சீனா, வணிகம் உள்ளிட்ட துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. பல்வேறு திட்டங்களுக்காக சீனாவிடம் கடன் பெற்ற இலங்கை கடன் தொகையை திரும்பச் செலுத்த முடியாத நிலையில் வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பன் தோட்டா துறைமுகத்தையும் அதை ஒட்டியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தொழில் மண்டலம் அமைப்பதற்காகவும் 99 ஆண்டு குத்தகைக்கு சீனா பெற்றுள்ளது.
அந்த வகையில் மாலத் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் 8 அண்டை நாடுகளுக்கு சீனா கடன் கொடுத்துள்ளதாக அமெரிக்க ஆய்வு அமைப்பான உலகளாவிய மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அந்த நாடுகளில் தனது செல்வாக்கைச் செலுத்துவதன் மூலம் சீனா இந்தியாவை தனது பொறிக்குள் சிக்கவைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.