லடாக்கில் மீண்டும் அத்துமீறிய சீனா – விரட்டியடித்த இந்தியா.!

ஒப்பந்தத்தை மீறி லடாக்கில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதாவது, நேற்று மற்றும் நேற்று முன்தினம் பான்காங் சோ ஏரியின் தெற்குக் கரை பகுதியில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்திய படை விரட்டியடித்தது என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து கர்னல் அமன் ஆனந்த் கூறுகையில், கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. ராணுவ, தூதரக பேச்சுவாரத்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை சீனா மீறி உள்ளது என்றும் அமைதியை கடைபிடிக்கவே இந்திய ராணுவம் விரும்புகிறது எனவும் கர்னல் அமன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025