அண்டை நாடுகளை அச்சுறுத்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய சீனா….தெற்காசியாவில் நிலவும் ஆதிக்க போட்டி….
நம் அண்டை நாடான சீனா இந்தியாவிற்க்கு பல வகையிலும் தொல்லைகொடுத்து வரும் நிலையில் தற்போது புதிய தலைவலியை கொண்டுவந்துள்ளது.என்னவென்றால் தற்போது சீனா உருவாக்கியுள்ள பெரிய மற்றும் அதிநவீன போர்க்கப்பல் நேற்று அந்நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது.இந்த கப்பலானது சீன கடற்படை சார்பில் 10,000 டன் எடை கொண்ட அதிநவீன பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் அதிநவீன போர்க்கப்பலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஜியாங்னான் துறைமுகத்தில் நடைபெற்றது. இந்த கப்பலில் இருந்து விமானம், ஏவுகணை, பிறநாட்டு கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கும் வகையிலானஅதிநவீன தொழில் நுட்ப அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.இந்த கப்பலில் 2 விமானங்களை தாங்கி செல்லும் வகையிலும் இடவசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இது சீனாவின் கடற்படை வரலாற்றில் ஒரு மைல்கள் என்று கூறப்படுகிறது. இதேபோன்ற கப்பல்கள் அமெரிக்க நாட்டின் கடற்படையில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் இந்தியா தனது வலிமையையும் நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தங்களுக்குள் சலசலக்கின்றனர்.