சீன பொருட்களை புறக்கணிப்பதால் சீனா பொருளாதாரம் பாதிக்காது.! ப.சிதம்பரம்.!
லடாக் எல்லையில் கடந்த திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடைபெற்ற மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீன தரப்பில் 35 வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை சீனா தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுவதால், இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியா-சீனா இடையில் பொருளாதார உறவு பல ஆண்டுகளாக நீடிக்கிறது. ஆனால், லடாக் எல்லைப் பிரச்சினையால் “சீனப் பொருட்களை புறக்கணிப்போம்” என்ற குரல் ஓங்கி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்தியா முடிந்த அளவிற்கு சுயச்சார்புடன் நமது தயாரிப்புகளையே வாங்க வேண்டும். மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்யவேண்டும். உலகம் முழுவதும் சீனா மேற்கொள்ளும் மொத்த வர்த்தகத்தில் இந்தியா வாங்குவது சிறிய அளவுதான். அதைப் புறக்கணிப்பதால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்காது ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.