குழந்தைகள் கொரோனா வைரஸை பரப்புகின்றனர் – ஐ.சி.எம்.ஆர்
குழந்தைகள் கொரோனா வைரஸை பரப்புகின்றனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படிதாராசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸானது, பிறந்த குழந்தைகள் முதல் முதுமை அடைந்த முதியவர்கள் வாராய் அனைவரையும் தாக்குகிறது.
இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா, நாத்தில் குழந்தைகள் இடையே கொரோனா வைரஸ் பரவல் குறித்து கூறுகையில், 17 வயதுக்கு உட்பட்டவர்களில் 8 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு உள்ளது. ஆனால், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எடுத்துக் கொண்டால், அது ஒரு சதவிகிதம் குறைவாகவே இருக்கும் என தெரிவித்துளளார்.
மேலும் அவர் கூறுகையில், குழந்தைகள் கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாக்கப்பட்டவர்களாக உள்ளாதாக நினைத்திருந்த நிலையில், தற்போது அவர்கள் வைரஸை பரப்புபவர்களாகவும் இருப்பதற்கான சில சான்றுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.