காதலைப் பெற குழந்தைகளுக்கு உரிமை உண்டு- உயர்நீதிமன்றம்!

சமீபத்தில் ஒரு பெண்,தனது கணவன் மற்றும் மாமியார் தனது குழந்தைகளை நான்கு நாட்களுக்கு பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளிடமிருந்து காதலை (அன்பையும்,பாசத்தையும்) பெற குழந்தைகளுக்கு உரிமை உண்டு என்றும் மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மனைவியின் அனுமதி:
38 வயதான தந்தை ஒருவர்,கடந்த 22 மாதங்களாக தனது குழந்தைகளை சந்திக்க மனைவி தன்னை அனுமதிக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.மேலும், அம்மனுவில்,குழந்தைகளின் தந்தை வழி தாத்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு தனது பேரக்குழந்தைகளைப் பார்க்க விரும்புவதால்,அதற்கு மனைவி அனுமதி தர உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
பிரிந்து விட்டோம்:
இந்த மனு மீதான விசாரணை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அனுஜா பிரபுதேசாய் அடங்கிய ஒற்றை நீதிபதி அமர்வு முன் நடைபெற்ற நிலையில்,”கடந்த 2018 ஆம் ஆண்டு தானும்,மனைவியும் பிரிந்துவிட்டதாகவும்,அதன்பிறகு தங்களது 10 வயது இரட்டை குழந்தைகளை மனைவி பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதாகவும்
இருப்பினும்,ஜூன் 2020 க்குப் பிறகு,தனது மனைவி ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லை என்றும்,எனவே குழந்தைகளின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும்,அவர்களைச் சந்திக்க விரும்புவதாகவும்,குழந்தைகளை தற்காலிகமாக தான் வைத்து பார்த்துக் கொள்ள அனுமதி தருமாறும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றம் அதிரடி:
இதனை விசாரித்தஉயர்நீதிமன்றம்:”மனுதாரரான தந்தை அவரது பெற்றோர்,தரமான நேரத்தை செலவிடுவதற்கும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியடைவதற்கும் உள்ள உரிமையை பறிக்க முடியாது.மேலும், பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி இருவரிடமும் அன்பு மற்றும் பாசத்தைப் பெறுவதற்கான உரிமை குழந்தைகளுக்கு உள்ளது.
ஒன்றாக நேரம் செலவிட வேண்டும்:
தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு இது அவசியம் என்று கூறிய நீதிமன்றம்,மனுதாரர்-தந்தைக்கு ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 16 வரை குழந்தைகளை அணுக அனுமதி வழங்கப்படுவதாகவும்,பிரதிவாதி-தாய் ஏப்ரல் 14 ஆம் தேதி புனேவில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு குழந்தைகளை அழைத்து வருவார் என்றும்,பெற்றோர்கள் இருவரும் குழந்தைகளுடன் நான்கு மணி நேரம் ஒன்றாக நேரம் செலவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஒத்தி வைப்பு:
அதன்பிறகு,குழந்தைகள் தங்கள் தந்தையின் பாதுகாப்பில் இருப்பார்கள், அவர் அவர்களை ஏப்ரல் 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு அதே வணிக வளாகத்திற்கு அழைத்து வந்து நான்கு மணி நேரம் ஒன்றாக நேரத்தை செலவழித்து, குழந்தைகளை அம்மாவிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து,ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025