குழந்தைகளே, உங்களுடைய சிறந்த பங்களிப்பைச் செய்யுங்கள்..! கடின உழைப்பே பலன் தரும்..! – ராகுல் காந்தி
இளைஞர்களின் மன உறுதியையும் எதிர்காலத்தையும் அழிக்க ஆர்எஸ்எஸ்-பாஜக மேற்கொள்ளும் வழக்கமான உத்திதான் இது.
சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில், பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இது சர்ச்சையான நிலையில், சர்ச்சைக்குரிய ஆங்கிலக் கேள்வி, வினாத்தாளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. மேலும், சர்ச்சைக்குரிய கேள்விக்கான முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இதுவரை பெரும்பாலான CBSE தாள்கள் கடினமாகவே இருந்துள்ளன, ஆங்கிலத் தாளில் உள்ள புரிதல் பத்தி அருவருக்கத்தக்கதாக உள்ளது. இளைஞர்களின் மன உறுதியையும் எதிர்காலத்தையும் அழிக்க ஆர்எஸ்எஸ்-பாஜக மேற்கொள்ளும் வழக்கமான உத்திதான் இது. குழந்தைகளே, உங்களுடைய சிறந்த பங்களிப்பைச் செய்யுங்கள். கடின உழைப்பே பலன் தரும். வெறுப்புணர்வு அல்ல.’ என பதிவிட்டுள்ளார்.
Most #CBSE papers so far were too difficult and the comprehension passage in the English paper was downright disgusting.
Typical RSS-BJP ploys to crush the morale and future of the youth.
Kids, do your best.
Hard work pays. Bigotry doesn’t.— Rahul Gandhi (@RahulGandhi) December 13, 2021