பிஞ்சுகளின் மூச்சை நிறுத்திய மூளைக்காய்ச்சல்..!தாயின் கதறலுக்கு நடுவில் 100 பிஞ்சு பூக்கள் உதிர்ந்தது
பீகார் மாநிலத்தில் என்செபாலிடிஸ் என்னும் வகை சார்ந்த மூளைக்காய்ச்சல் குழந்தைகளை தாக்கியது.இந்நிலையில் கடந்த 16 நாட்களில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த குழந்தைகளில் உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 100 ஐ எட்டியுள்ளது.
பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் கடந்த 1-தேதி முதல் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதில் 84 குழந்தைகள் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.
மூளைக் காய்ச்சல் அறிகுறியுடன் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கடுமையாக குறைந்தது காணப்படும் குழந்தைகளுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இம்மாவட்டத்தில் மட்டும் ஆபத்தான மற்றும் இக்கட்டான நிலையில் பல குழந்தைகள் இரண்டு அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்ற சூழ்நிலையில் குழந்தைகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வந்தார்.அவர் குழந்தைகளின் உடல்நிலை குறித்து பல நிபுணர்களுடன் பாட்னாவில் ஆலோசனை மேற்கொண்டார் மேலும் இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் நேரில் பார்வையிடுகிறார்.
தற்போது வரை இக்காய்ச்சலுக்கு 100 குழந்தைகள் இறந்துள்ளது நாட்டு மக்களிடையே அதிர்ச்சி கலந்த வேதனையை அளித்துள்ளது.மேலும் தாய்மார்களின் கதறல் கலங்க வைக்கிறது.குழந்தைகளை பாதுகாக்க மாநில மற்றும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது
.