பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
அதன்படி,அரசு ஊழியர்களாக இருக்கும் ஒரு ஆண், அவரது மனைவி இறந்தவராகவோ, மனைவியை விட்டு பிரிந்தவராகவோ இருந்தால் அவருக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். அதிலும், அந்த குழந்தைக்கு தந்தை மட்டுமே இருப்பின் அவர்கள் குழந்தைகள் கவனிப்பு விடுமுறை (சைல்ட் கேர் லீவ்-சிசிஎல்) எடுக்கலாம்.
மேலும், குழந்தைகள் மாற்று திறனாளிகளாகவோ ,சிறப்பு குழந்தைகளாக இருந்தாலும் ஆண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, முன்கூட்டியே விடுப்பு எடுப்பவர்கள் தாங்கள் பணியாற்றும் துறையில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், முதல் 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பை குழந்தையை கவனிக்க ஊழியர்களுக்கு வழங்கப்படும், இரண்டாம் ஆண்டில் 80% ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஊழியரின் குழந்தை மாற்று திறனாளி எனில் 22 ஆண்டுகள் வரை எப்போது வேண்டுமானாலும் விடுப்பு எடுக்க அனுமதி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…