எருமை பயிர்களை சேதப்படுத்தியதற்காக சிறுவன் அடித்து கொலை.! 3 பேர் மீது வழக்கு பதிவு.!

Default Image

உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஷாஜகாப்பூரில் கரும்பு பயிர்களை எருமை சேதப்படுத்தியதற்காக 15 வயது சிறுவன் 3பேர் சேர்ந்து அடித்து கொன்றுள்ளனர்.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ஷாஜகாப்பூரில் உள்ள சிசையா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலையளவில் 15 வயதான குல்தீப் யாதவ் என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த போது, அவனது எருமை மாடு அருகிலுள்ள சாது சிங் மற்றும் அவரது சகோதரர் தர்மேந்திரா சிங் ஆகிய விவசாயிகளின் கரும்பு வயலுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

அதனையடுத்து எருமையை பிடித்த சாதுசிங் மற்றும் அவரது சகோதரர் சிறுவனிடம் எருமையை தர மறுத்ததால்  வாக்குவாதம் ஏற்பட்டது. அதனையடுத்து சாது சிங், தர்மேந்திர சிங் மற்றும் அவரது மகன் பூபிந்தர் ஆகியோர் இணைந்து சிறுவனை சரமாரியாக குச்சியால் அடித்துள்ளனர். இதனால், அந்த சிறுவன் மயக்கமடைந்துள்ளான். இதையடுத்து,  சிறுவனை தாக்கிய மூவரும் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பின்னர்,  சிறுவனின் தந்தை மகேஷ் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது நிலை மோசமாக இருந்ததால் உயிரிழந்துள்ளார். மகனின் கொலைக்கு காரணமான மூவரை கைது செய்ய வலியுறுத்தி தந்தை அவரது குடும்பத்தினர் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான தன்வீர் கானுடன் இணைந்து எஸ். எஸ். பி அலுவலகத்தின் முன்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

அதனையடுத்து ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி(எஸ். எச். ஓ) ஜாக் நரேன், சிறுவனை கொன்ற மூவரின் மீது ஐபிசி 302(கொலை) பிரிவின் கீழ் FIR பதிவு செய்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்