குஜராத் மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் ,துணை முதலமைச்சர் ,ஆளுநர் மற்றும் வி.ஐ.பிக்கள் செல்வதற்காக கடந்த 20 வருடங்களாக “பீச்கிராப்ட் சூப்பர் கிங்டர்போ “என்ற விமானம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த விமானம் மூலம் அகமதாபாத்தில் இருந்து கவுகாத்தி செல்ல 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆகிறது.இந்த விமானத்தில் 9 பேர் மட்டுமே பயணம் செய்யமுடியும்.இதனால் குஜராத் மாநில அரசுக்காக புதிய விமானம் வாங்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தற்போது 12 பேர் செல்லக்கூடிய “பாம்ப் ரைடர் சேலஞ்சர் 650” என்ற இரண்டு இன்ஜின் கொண்ட விமானம் முடிவு செய்யப்பட்டது.இந்த விமானம் மணிக்கு 870 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.இன்னும் இரண்டு வாரத்தில் குஜராத்திற்கு இந்த விமானம் வர உள்ளது.
ஆனால் இந்த விமானம் வான்வெளியில் பறக்க இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஏனென்றால் சுங்கத்துறை ,விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் இதர துறைகளின் சான்றிதழ் வாங்கிய பின்னர் வான்வெளியில் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…