உத்தரப்பிரதேச மாநிலத்தில சகோதரிகளின் வாழ்க்கையில் விளையாடும் கயவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும் என்றும் லவ் ஜிகாத்தைத் தடுப்பதற்கும் கடும் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ ஜூனாபூரில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடும் சட்டம் இயற்றப்படும் என்றும் எங்கள் சகோதரிகளின் அடையாளத்தையும், மாண்பையும் குலைக்கின்ற் வகையில் செயல்படுபவர்களுக்கு இறுதி ஊர்வல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் சமீபத்தில் தான் அலகாபாத் நீதிமன்றம் ஓர் வழக்கில் தீர்ப்பளித்தது . மதம்மாறி திருமணம் செய்த இஸ்லாமிய பெண், போலீஸ் பாதுகாப்புக் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
திருமணமான பெண் பிறப்பால் ஒரு முஸ்லிம், ஆனால் திருமணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன் இந்து மதத்துக்குமாறி உள்ளார். திருமணம் செய்வதற்காக மதம்மாற முடியாது என்று இவ்வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்து மனுவைத் தள்ளுபடி செய்ததை இங்கு கூறுகிறேன் என்று தெரிவித்தார்
இந்நிலையில் இம்மனுவை விசாரித்த நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி திருமணம் செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன் மணப்பெண் இந்து மதத்துக்கு மாறியுள்ளார், அதன்பின் திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…