ஆளுநருக்கு எதிரான தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைக்கு, மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். மேலும் பாஜக ஆட்சி செய்யாத மற்ற மாநிலங்களுக்கும், இது போன்று ஆளுநர்களுக்கு மசோதாக்களை ஒப்புதல் வழங்குவதற்கு கால நிர்ணயம் செய்வது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வரவேற்பு அளித்திருக்கிறார். இது குறித்து மம்தா பானர்ஜி, ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர்களுக்கு எதிரான, ஸ்டாலினின் முயற்சிக்கு ஆதரவளிப்பதாக கூறினார். முன்னதாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நீண்டநாட்களாக இழுபறியில் வைத்திருந்தார்.
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல்வரின் இந்த கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது மம்தா பானர்ஜியும் ஆதரவு அளித்துள்ளார்.
மேலும் ஆளுநர்களுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, பாஜக ஆட்சி செய்யாத மற்ற மாநில முதல்வர்கள் ஒன்று சேர்ந்து விவாதிக்கவும் அவர், முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…