டெல்லி:தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,இன்று மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
சர்வதேச முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அதிகாலை சென்னை வந்தடைந்தார்.
டெல்லி புறப்பட்ட முதல்வர்:
இதனைத்தொடர்ந்து, டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுகவின் அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய கட்டடத்தின் திறப்பு விழா வரும் 2-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டார்.
பிரதமருடன் சந்திப்பு:
இந்த நிலையில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார்.பின்னர் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியையும்,3.30-க்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கவுள்ளார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்:
இதனையடுத்து,இன்று மாலை 4.30க்கு டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் சந்திக்கிறார்.ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் முதல்வர் சேர்ந்து சந்திக்கவுள்ள்ளார்.
சந்திப்பிற்கான காரணம்:
மேலும், 1 ஆம் தேதி மாலை 4.30-க்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.தமிழக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு,நீட் விலக்கு,மேகதாது, ஜிஎஸ்டி நிலுவை தொகை, நிவாரணம் உள்ளிட்டவைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…