கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொட தொடங்கியது. 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யப்பட்டது. 15-வது முறையாக முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு மாநிலத்தின் பட்ஜெட் செலவினம் ரூ. 3.71 லட்சம் கோடியாக உள்ளது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
2025 நிதியாண்டில் கர்நாடகாவின் பொருளாதாரம் 6.6% வளர்ச்சி அடையும் என்று அவர் கூறினார். கர்நாடக பட்ஜெட்டில் சில முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன.
2024-25 நிதியாண்டில் பெண்கள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ. 86,423 கோடி வழங்கப்படும்.
2022-23 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இந்த நிதியாண்டில் 18% அதிகரிப்புடன் நாட்டிலேயே இரண்டாவது அதிக ஜிஎஸ்டி வசூல் ஆதாரமாக கர்நாடகா உள்ளது என்று முதல்வர் கூறினார்.
மத்திய அரசால் வசூலிக்கப்படும் செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் அதிகரித்து வருவதாகவும், அவை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை என்று முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
பட்ஜெட் தாக்கலின் போது மதுபானங்களின் விலையை மீண்டும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கலால் துறையின் அனைத்து சேவைகளும் கர்நாடகாவில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று கூறினார்.
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க சரத் பவார் கோரிக்கை..!
80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீட்டு வாசலில் உணவு தானியங்களை (பி.டி.எஸ்) இலவசமாக வழங்குவதற்காக, புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டமான (அண்ணா-சுவிதா) என்ற புதிய திட்டத்தை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தவுள்ளது என தெரிவித்தார்.
கர்நாடக அரசு 2024-25-ல் 3 லட்சம் வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில், பெரும்பாலான பயனாளிகள் தங்களின் பங்கான ரூ. 5 லட்சத்தை செலுத்த முடியாததால், மாநிலத்தில் இத்திட்டம் மந்தமடைந்துள்ளது. எனவே பயனாளிகள் செலுத்த வேண்டிய ரூ.4 லட்சம் அரசால் வழங்கப்படும் என்று கூறினார்.
கர்நாடகாவில் நம்ம தினை என்ற புதிய திட்டத்தின் கீழ் பதப்படுத்தப்பட்ட மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தினைகள் மலிவு விலையில் கிடைக்கும்.
கர்நாடகா அரசு மகளிர் உதவிக் குழுக்களுக்குரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் கூறினார் .
மருத்துவக் கல்லூரிகளில் உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 400 கோடியும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்டுவதற்காக ரூ. 130 கோடியும் வழங்கப்படும் என அறிவித்தார்.
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…
சென்னை: மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : சந்தானம் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக காமெடியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து மட்டுமே திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், திடீரென்று…