உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஏரளாமானோர் பங்கேற்கின்றனர்.
மேலும் இந்த கோவில் திறப்பு விழாவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. யாரெல்லாம் இந்த விழாவில் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்நிலையில், வெகு விமர்சியாக நடைபெறவுள்ள இந்த ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி ஜனவரி 22-ம் தேதி புதுச்சேரியில் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
கருவறைக்குள் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை… முதல் புகைப்படம் வெளியானது!
ஏற்கனவே, ராமர் கோவில் திறப்பு விழா அன்று(ஜனவரி 22 ஆம் தேதி )நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் , மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களில் அரை நாள் விடுமுறை அதாவது 22-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்து இருந்தார்.
இதனையடுத்து, அதனை தொடர்ந்து தற்போது புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி திங்கள்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் பொதுவிடுமுறை என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…