#Breaking:பாஜகவின் அழுத்தம்;பணிந்த முதல்வர் ரங்கசாமி..!

Published by
Edison

புதுச்சேரி அமைச்சரவை பங்கீட்டில்,பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது,பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.இதையடுத்து கடந்த 7ம் தேதி ரங்கசாமி முதல்வராக பதவியேற்று கொண்டார்.

இதனையடுத்து,சபாநாயகர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகளை கேட்டு முதல்வர் ரங்கசாமி அவர்களை பாஜக வலியுறுத்தி வந்தது.ஆனால் 2 அமைச்சர் பதவிக்கு மேல் தரமுடியாது என்று முதல்வர் தெரிவித்ததால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது. இதன்காரணமாக, அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு காலதாமதமாகி வருகிறது.

இதற்கிடையில்,பாஜகவை சேர்ந்த 3 பேரை எம்எல்ஏ ஆக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.இதனால்,முதல்வர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து,23 நாட்களுக்கு பிறகு தற்காலிக சபாநாயகர் மற்றும் எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்வானது கடந்த மே மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது.பின்னர்,முதல்வர் ரங்கசாமியிடம்,தங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகள் கட்டாயம் வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில்,புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு தொடர்பாக பாஜக தொடர்ந்து கொடுத்த அழுத்தத்துக்கு முதல்வர் ரங்கசாமி பணிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல்,பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 24 நாட்கள் இழுபறிக்கு பிறகு பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி,புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமையன்று வரவுள்ளதாகவும்,அப்போது,புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

5 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

5 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

6 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

7 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

8 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

10 hours ago