“இனி பாடப்புத்தகத்தில் இவை இடம் பெறாது” – கேரள முதல்வரின் அறிவிப்பு-கனிமொழி வரவேற்பு…!
பெண்களுக்கு எதிரான எந்தவொரு கேவலமான வார்த்தைகளும் கேரளாவின் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறாது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்ததை,எம்.பி. கனிமொழி வரவேற்றுள்ளார்.
கேரளாவில் அடுத்தடுத்து இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,மாநிலத்தில் பாலின சமத்துவம் மற்றும் சம உரிமைகளை மேம்படுத்துவதற்காக பெண்களுக்கு எதிரான எந்தவொரு கேவலமான சொற்களும் இடம்பெறாத வகையில்,கேரளாவின் பள்ளி பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்டு தணிக்கை செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள்,தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கூறியதாவது:
“பாலின சமத்துவத்தின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு, கேரளாவின் பள்ளி பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்டு தணிக்கை செய்யப்படும், இது பெண்களை இழிவுபடுத்தும் சொற்களையும் சொற்றொடர்களையும் சல்லடை செய்யும். எங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை பாலின சமத்துவம் மற்றும் சம உரிமைகள் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளும் இடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்”,என்று ட்வீட் செய்துள்ளார்.
இதனையடுத்து,முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பை,தமிழக திமுக எம்.பி. கனிமொழி வரவேற்றுள்ளார்.
மேலும்,கனிமொழி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்:”நமது மாநிலம் உட்பட அனைத்து மாநிலங்களும் இதைச் செய்யத் தொடங்க வேண்டும்”,என்று கூறி பதிவிட்டுள்ளார்.
All the States including our state should start doing this. https://t.co/4BNWvj1S1E
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 24, 2021