முல்லைப்பெரியாறில் புதிய அணை…!பிரதமர் மோடி தலையிடுமாறு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் …!
முல்லைப் பெரியாறு அணை, சுற்றுச் சூழல் ஆய்வுக்கு அனுமதி தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், முல்லை பெரியார் அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும்போது 7 நிபந்தனைகளை மேற்கொள்ளுமாறு கேரளாவிற்கு உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் கேரள அரசு புதிய அணை கட்டும் ஆய்வை தொடங்க தமிழக அரசின் அனுமதி கட்டாயம் தேவை என்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை திட்டவட்டமாக தெரிவித்தது.புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் இதற்கு முதலமைச்சர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.மேலும் முல்லைபெரியாறு அருகே புதிய அணை கட்ட ஆய்வறிக்கை தயாரிக்க கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததற்கு முதலமைச்சர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும் கடிதத்தில் அனுமதியை திரும்பப்பெறக்கோரியும் தெரிவித்துள்ளார்.சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் முடிவு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும்.அதேபோல் முல்லை பெரியாறு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.