பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி…!
பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இந்த பாதிப்பு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர். இந்தநிலையில், கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கி கூறி தமிழகத்திற்கான உரிய நிதியை பெறுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் இன்று காலை சந்திக்கவுள்ளார்.
இந்நிலையில் கஜா புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெய்குமாரும் செல்கிறார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற உள்ள சந்திப்பின் போது, கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.