ராஜஸ்தான் மாநில முதல்வர்..! ராகுல் காந்தி தேர்வு செய்வார் …!கூட்டத்தில் முடிவு …!
ராஜஸ்தான் மாநில முதல்வரை ராகுல் காந்தி தேர்வு செய்வார் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைப்பதற்கு ஒரு இடம் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்தது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.பின்னர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் மாநில முதல்வரை ராகுல் காந்தி தேர்வு செய்வார் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.