அனைத்து பிரச்சினைகளையும் ஒன்றாக நின்று எதிர்கொள்ளலாம்-கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளாவில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் பினராயி விஜயன்.
தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.பல மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.மழையால் பல மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
நிவாரண முகாம்களில் இரண்டரை லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் சிக்கிய 40 பேரை காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர் .ராணுவம், விமானப்படை, கடற்படை என அனைத்து படைகளும் தேடும் பணி மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனது.கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்று கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் கவலபரா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின் காரணமாக சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளது.மேலும் நிலச்சரிவில் 60க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .அவர்களில் 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் 40 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.மேலும் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,அனைத்து பிரச்னைகள் மற்றும் சிரமங்களையும் ஒன்றாக நின்று எதிர்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025