முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு வாழ்த்து!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து, பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.