முதலமைச்சர் நாராயணசாமியுடன் தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார்.
ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், உடனே அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஆளுநர் ஏற்கவில்லை.இந்நிலையில் முதலமைச்சரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அதிருப்தியடைந்தார்.
இதனால் கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகைக்கு எதிரே தர்ணாவில் ஈடுபட்டார்.தர்ணாவில் இருந்துகொண்டே அரசுப் பணிகளை கவனிக்கிறார்.இன்றும் புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி 5வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், முதலமைச்சர் நாராயணசாமியுடன் தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை. சட்டத்தின் படி பணியாற்றி வருகிறேன்.திட்டங்கள் குறித்து ஏன் வெளிப்படையாக கூறவில்லை. ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை மட்டுமே வலியுறுத்தினேன் என்று தெரிவித்தார்.
அதேபோல் பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.இன்று மாலை 6 மணிக்கு, ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…