முதலமைச்சர் நாராயணசாமி 6வது நாளாக தர்ணா!!காகத்தின் புகைப்படத்தை பதிவிட்டு கிண்டல் செய்த கிரண்பேடி!!!
நாராயணசாமியின் போராட்டம் குறித்து ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார்.
ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், உடனே அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஆளுநர் ஏற்கவில்லை.இந்நிலையில் முதலமைச்சரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அதிருப்தியடைந்தார்.
இதனால் கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகைக்கு எதிரே தர்ணாவில் ஈடுபட்டார்.தர்ணாவில் இருந்துகொண்டே அரசுப் பணிகளை கவனிக்கிறார்.இன்றும் புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி 6வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
A member of the media asked me an interesting question.
“ Is Dharna also Yoga”?
I said, “Yes it is. It depends on the purpose for which u sit…what kind of ‘Asanas’ you perform and the ‘sound’ u create? “…. pic.twitter.com/7EScMiDWKE— Kiran Bedi (@thekiranbedi) February 18, 2019
இந்நிலையில் நாராயணசாமியின் போராட்டம் குறித்து ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் ,தர்ணா கூட ஒருவகை யோகா தான் .அது மட்டும் அல்லாமல் அதற்கு ஒரு காக்கையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.