முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி முடிவு ..!
கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருவதையொட்டி மாஹேவில் அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு உருவாக்கி சிறப்பு மருத்துவர்கள் நியமிக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் ஜிப்மர் மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததாகவும், நிஃபா வைரஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.